கல்முனை பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் கொவிட்19 தடுப்பு மருந்து ஏற்றுவதற்கான அவசியம் பற்றி வலியுறுத்தும் சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கர் ஒட்டும்,காட்சிப்படுத்தும் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்ட்டது.
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரனின் வழிகாட்டலில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதர ஊழியர்கள் இவ் விழிப்புணர்வு நடவக்கையில் ஈடுபட்டனர்.
கொவிட் தொற்றைத் தோற்கடிப்போம், கொவிட்19 தடுப்பு மருந்துடன் முன்னோக்கி புதிய வாழ்க்கை முறைமைகளை தொடர்ந்து போணுவோமாக எனும் தொனிப்பொருளில் இச் சுவரொட்டியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொவிட்19 இற்கானதடுப்பூசிஏற்றும் செயற்திட்டம் கிழக்குமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.