கிழக்கில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் ஏற்றப்படும்

0
292

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வேறு நோய்த்தொற்று இருப்பவர்களும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையில்
10,500க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளாதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.