திருகோணமலையில் பொது மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பம்

0
171

திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் பொது மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய்த்தொற்று இருப்பவர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் கர்ப்பணி தார்மாருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்படுகிறது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,
பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை, அபயபுர மகளீர் கல்லூரி மற்றும் தான்யகம அரச வைத்திய நிலையம் ஆகியவற்றில் முதற்கட்ட தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.