மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/00020.00_19_17_01.Still012-1024x768.jpg)
பிரதேசத்தில் உள்ள அரச தனியார் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,60 வயதிற்கு மேற்பட்டோர்கள்,நீரழிவு நோய்,குருதி அழுத்தத்திற்கு பாதிப்புற்றவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ்முதலி ஸ்டீவ் சஞ்சீவ் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.