யாழில் பயணத்தடையின் போது திருட்டில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது!

0
614

பயணத் தடை வேளையில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள வீடொன்றில் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மடிக்கணணி கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியினை திருடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி ,குருநகர் பகுதியை சேர்ந்த இருவர் இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கைது செய்யப்பட்டோரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த நபர்கள் மேலும் ஒரு வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக அங்கும் மடிக்கணணி ,கைத்தொலைபேசி, யினை திருடிய தாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்கள்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு மடிக்கணணி இரண்டு கைத்தொலைபேசி,இரு துவிச்சக்கரவண்டிகள்50 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணையின் பின் சட்ட நடவடிக்கைக் குட்படுத்தப்படவுள்ளனர்.