மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார ப்பணிமனையினால் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என 220 பேருக்குதடுப்பூ ஏற்றப்பட்டன.
இதனிடையே, நேற்று பாதுகாப்பு படையினர்,பொலிஸார் என 154 பேருக்குதடுப்பூசிகள் வழங்கப்பட்டதுடன் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு 1600 சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றள்ளன.
எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிமணை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.