கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டு நாட்களேயான சிசு மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிசுவே கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சலால் மரணமடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று (9) பதிவான கொரோனா மரணங்களில் சிசுவும் உள்ளடங்குவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையில் கடந்த மாதம் 25ஆம் திகதி சிசு பிறந்துள்ளதுடன் 27ஆம் திகதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
வீடு திரும்பியதன் பின்னர் ஏற்பட்ட வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக சிசு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிசுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்வடைந்துள்ளது.