காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் தடுப்பூசி ஏற்றல்

0
227

மட்டக்களப்பு காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று வியாழக்கிழக்கிழமை இடம் பெற்றது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக் கட்டிடத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்றது.

இன்றைய தினம் புதிய காத்தான்குடி 167 பி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் அவர்களின் மேற்பார்வையில் இங்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.