எரிபொருள் விலை அதிகரிப்பு: ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்!

0
238

அரசாங்கத்தால் அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வங்கி வட்டி விகிதங்கள், வௌிநாட்டு இருப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், நலனையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.