களுவாஞ்சிகுடியில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

0
206

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சா.இராஜேந்திராவின் தலைமையில் இந்த கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்றைய தினம் பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.