தற்போது மாகாணசபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும் 9 பொது வைத்தியசாலைகள், சுகாதார அமைச்சின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைவாக தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸவாளை, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
மேற்படி வைத்தியசாலைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.