நான்கு மாதங்களில் 38 இலட்சம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

0
383

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 38 இலட்சம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 340,000 பிசிஆர் பரிசோதனைகளும்
மே மாதம் 712,000 பிசிஆர் பரிசோதனைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்துக் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிசோதனைகளில் 225,897 பேர் தொற்றாளர்களாக இனங்காண்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.