தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். கடைசி அறிக்கைகள் வந்தபோது, அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றிருந்தார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன்முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.