மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு

0
551

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் கொரோனாவைரஸ் தொற்றுக்காரணமாகதொழிலை இழந்துள்ள சிகையலங்காரம் செய்யும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 5000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய போரதீவுப்பற்றில் தொழில் பாதிக்கப்பட்ட 20 சிகை அலங்கார குடும்பங்களுக்கு முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், கணக்காளர், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்தகொண்டனர்.