தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கை திட்டத்தின் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான மரக்கறி கன்றுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2020, 2021 ஆண்டு காலப்பகுதிக்குள் 20 இலட்சம் வீட்டுப்பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கை நிகழ்ச்சி திட்டத்தின் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான மரக்கறி கன்றுகள் வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி திணைக்கள பிரிவின் ஊடாக 48 கிராம சேவையாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட சமுர்த்தி பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்ட மரக்கறி கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி கிராம சேவையாளர் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ்.புஸ்பராணி ஏற்பாட்டில் நடைபெற்ற வீட்டுத்தோட்ட மரக்கறி கன்றுகள் வழங்கும் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் டி.சத்தியசீலன் கலந்துகொண்டு மரக்கறி கன்றுகள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் கே.ராஜன், அபிவிருத்தி உத்தியோகத்தர் மீரா முருகதாஸ், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள், பட்டதாரி பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.