மட்டக்களப்பு பண்டாரியாவெளியில் தென்னங்கன்றுகளை நாட்டும் நிகழ்வு

0
507

மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்டாரியாவெளியில் குளத்தைச் சூழ குளக்கட்டு ஓரங்களில் தென்னங்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இன்று பண்டாரியாவெளி கிராமத்தில் நடைபெற்றது.

அங்கு 100 நல்லின தென்னங் கன்றுகளும் அவற்றை குறிப்பிட்ட காலம் வரை கால்நடைகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இயற்கைக்கு இசைவாக மரக் கூடுகளும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் அந்நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் இந்திரன் ஜயசீலியின் இணைப்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கிராம மக்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.