ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம்: தலைமுடி காணிக்கை

0
142

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகின்ற நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ள காளி கோவிலில், நேற்று (25) காலை விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதன்பின்பு தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார்.

அவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.