யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73வது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைதூதுவர் ராம் மகேசினால்இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டளவில்விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.