பதுளை வேவெஸ்ஸ தோட்டம், தெபெத்த பிரதேசத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை, நேற்று மாலை பதுளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த 30 வயது இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் 60 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுப்படுத்தப்பட்டு மிகவும் கொடுராமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஒன்றும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இச்சம்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.