தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
நோயாளர் நலன் கருதி போட்டோப் பிரதி!
நலன்புரிச் சங்கத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால், நோயாளர் நலன் கருதி போட்டோப் பிரதி இயந்திரம், கணிணி தட்டச்சு போன்ற சேவைகள் நோயாளர்களுக்காகவைத்தியசாலையில் உள்ள நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமான லயன் சி.ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலையினுடைய அத்தியட்சகர் வைத்தியர் திலீபன், பொது வைத்திய நிபுணர் பா.நிஷாகன், வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்க செயலாளர் வைத்தியர் தர்சன் ஆகியோர் இணைந்து இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்கள் சிலசமயங்களில் போட்டோப் பிரதி எடுப்பதற்கு வைத்தியசாலைக்கு வெளியே அலைந்து திரிகின்றமை சங்கத்தால் உணரப்பட்டமையால் சங்கத்தின் நிதியில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபா செலவில் கணிணி தொகுதியும் போட்டோப் பிரதி இயந்திர சேவையும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், தாதிய பரிபாலகர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.