தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான யோசனை நாளை அமைச்சரவைக்கு!

0
118

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார விநியோக நெருக்கடிக்குத் தீர்வாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காகத் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடம் மதிப்பீடுகள் கோரப்பட்டுள்ளன என்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மிகக் குறைந்த விலையில் கொள்வனவுகளை மேற்கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் கோரப்பட்டுள்ளன.

இதனை அவசர கொள்வனவாகக் கருத முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.