டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் ஒன்று இன்று மாலை 6.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 9 வைத்தியசாலை ஊழியர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் வனராஜா தோட்டத் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனை ஊழியர்களை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தின்போது பஸ்ஸில் வைத்தியசாலை ஊழியர்கள் 16 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.