இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், திணைக்கள சார்ந்த அதிகாரிகளின்
பங்குபற்றுதலுடன் அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரையினை தொடர்ந்து, சுதந்திர தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டு சிரமதனமும் மேற்கோள்ளப்பட்டது.