கல்கிஸையில் மூன்று விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு

0
175

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருவேறு பிரதேசங்களில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த மூன்று விபச்சார விடுதிகள் நேற்று (4) சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார விடுதிகளை நடத்தி வந்த மூவரும் அவற்றை நடத்துவதற்கு உடந்தையாக இருந்த ஐந்து பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயாகல, விஹாரஹேன, பாணந்துறை, போனுவிட்ட, கஹட்டகஸ் ஹந்திய, மடோல்சீம, புவாக்பிட்டிய மற்றும் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 22, 39 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.