திருக்கோவில் பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு

0
168

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வீடற்று வாழ்ந்த வரும் வறிய குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு வீடுகள் இன்றி வாழ்ந்து வந்த குடும்பங்களில் சுமார் 98 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் முயற்சின் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன.

குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப 6இலட்சம் மற்றும் 10இலட்சம் பெறுமதியான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தற்போது வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு வருவதுடன் நேற்றைய தினம் பாராளும்னற உறுப்பினரினால் 10 வீடுகள் சம்பிரதான ரீதியாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் திருக்கோவில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.