மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுபோக விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் விவசாய திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம்,நீர்பாசன திணைக்களம்,மாகாண நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றின் பிரதி பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்கள் மற்றும் சிறிய குளங்கள் ஊடாக இம்முறை 33800 ஹெக்ரயரில் சிறுபோக வேளான்மை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுமார் 32700ஹெக்டயர் உரம் வழங்குவதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டதுடன் அவற்றினை முடிந்தளவு தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.