கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் விவசாய உற்பத்தி அறுவடை

0
158

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில்  சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட விவசாய உற்பத்தியின் அறுவடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் நடைபெந்ந இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாரன் கலந்துகொண்டு விளை பொருட்களை அறுவடை செய்து நிகழ்வினை அரம்பித்துவைத்தார்.

அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்துடன் இணைந்ததா மேற்கொள்ளப்படும் இத்தோட்டமானது, கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளரின் ஆலோசனைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 
இத்தோட்டத்திற்கு பயிர்ச் செய்கை தொடர்பான ஆலோசனைகளை கரவெட்டி பிரிவின் விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் வழங்கின்றார்.

இரசாயண வளமாக்கிகள் பயன்படுத்தாது வங்கி ஊழியர்கள், கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் பங்களிப்புடன் தாயாரிக்கப்பட்ட சேதனப்பசளயினை மாத்திரம் பயன்படுத்தி மேற்படி விவசாயத் தோட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வில் கரவெட்டி பிரிவின்  போதனாசிரியர் லிங்கேஸ்வரன், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இத் தோட்டத்தில் கத்தரி, மரவள்ளி. மிளகாய், வற்றாளை, கீரை, பீர்க்கு, பயற்றை, வெண்டி, நாடை, கச்சான் போன்ற  மரக்கறிவகைகள் இதன்போது அறுவடைசெய்யப்பட்டது.