மட்டு.பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்

0
156

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் பங்குனி உத்தர வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மஹோற்சவ பிரதிஸ்டா பிரதம சிவச்சாரியார் கிரியாகிரம
ஜோதி,சிவாகம கிரியா சக்கரவர்த்தி பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்ற கிரியைகள் ஆரம்பமானது.

சித்திவிநாயகருக்கு விசேடக அபிசேகஆராதனை,கொடிச்சீலைக்கு விசேட பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று
கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில்17ஆம் திகதி தேர் உற்சவமும்,18ஆம் திகதி பங்குனி உத்தர தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.