நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்

0
154

நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன் போக்குவரத்து முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (5) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே ஏற்றுமதி, இறக்குமதி கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் என்ற முறையில் நாமும் சாரதிகளும் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கொள்கலன்களின் சாரதிகள், 24, 48 மணித்தியாலங்கள் நித்திரையை தொலைத்து நீண்டவரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். எனினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 3000, 5000 ரூபாய்க்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே எரிபொருளை விநியோகிக்கின்றனர்.

இந்தத் தொகையில் எரிபொருளை பெற்றுக்கொண்டு ஏற்றுமதி, இறக்குமதிக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவது மிகவும் கடினமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.