யாழ் மாவட்ட செயலகத்தில் மகளிர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

0
196

நாடும் தேசமும் உலகமும் அவளே எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


யாழ் மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை கண்காட்சியும் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறுகிறது குறித்த கண்காட்சியினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார் பிரதமவிருந்தினராக பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் கலந்து கொண்டிருந்தார்.