கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

0
178

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை தோன்றியுள்ளது.
இந்நிலையிலேயே கிளிநொச்சியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு களஞ்சியத்திற்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.