உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை 9.30 மணிக்கு ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.
மேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் இன்று ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.