அக்கரைப்பற்று அன்னை சாரதா கலவன் பாடசாலையின் தசாப்த விழா நிகழ்வுகள் இடம்பெற்றன
நிகழ்வில் பாடசாலையின் தசாப்த விழா நினைவுப் பெயர் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் மேடை நிகழ்ச்சிகள்,
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பாடசாலையின் முதல் அதிபராக நியமனம் பெற்று பாடசாலை வளர்ச்சிக்குபெரும் பங்காற்றிய பி.தணிகாசலம் பாட்சாலை கல்வி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் பிரதேச செயலாளர் பிரதேச சபை தவிசாளர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர் அபிவிருத்திக்குழு செயலாளர் மற்றும் உறுப்பினர் பாடசாலை வரலாற்றில் புலமைபரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கடந்த 6 வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியடைந்த 92 மாணவர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வி சமூகத்தின் முழுதான பங்களிப்புடன் பாடசாலையின் அதிபர் கே.கோமளம் தலைமையில் இடம்பெற்ற நி;கழ்வுகளில் பிரதம அதிதிகளாக திருக்கோவில் வலயகல்வி பணிப்பாளர்
யோ.ஜெயச்சந்திரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.