மட்டக்களப்பு மண்முனை பற்று ஆரையம்பதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பல் பொருள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் விற்பனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மண்முனை பற்று ஆரையம்பதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.எல்.எம.அஸ்மி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம். உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சுதர்சினி.. மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.டி.தங்கவேல் மண்முனைப் பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.சுந்தரலிங்கம். உட்பட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சங்கத்தின் பணிப்பாளர்கள். முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.