வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று (04) அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.