முல்லேரியா வைத்தியசாலையில் செயலற்ற நிலையில் இருக்கும் பிசிஆர் பரிசோதனை இயந்திரத்தை நாளை (02) முதல் வழமைக்கு கொண்டுவர முடியும் என இந்நாட்டில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த இயந்திரத்தில் உள்ள கோளாறு தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திரத்தின் இயக்கப்பகுதியில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பிரதான நடவடிக்கைகள் சாதாரணமான முறையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.