பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 10 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.