சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முன்வைக்கிறார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் ஆரம்பம்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்துக்கு வருகை
ஜனாதிபதியின் வரவு செலவு உரை நாடாளுமன்றத்தில் ஆரம்பம்
ஊழல் நிறைந்த ஆட்சி, தவறான முகாமைத்துவம் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாதிப்பை எதிர்நோக்கியது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தாக்கம் அரசியல், சமூக ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
மக்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு நிலையான அபிவிருத்தி நோக்கிய பயணத்துக்காக முன்வைக்கப்படும் வரவு-செலவுத்திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை 2024 டிசம்பர் மாதம் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
ஏற்றுமதியை அதிகரித்து முதலீடுகளை உருவாக்கி கடன் மீள செலுத்துவதற்கான இயலுமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
பணவீக்கம் குறைவடைந்திருந்தாலும் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கு நிதி நிவாரணம் மாத்திரம் போதுமானதல்ல. பொருளாதார ரீதியாக சமூகத்தை மேம்படுத்துவதற்கு நிலைபேறான திட்டம் அவசியமாகும்.
பொதுமக்களின் பணத்தை செலவளிக்கும்போது நிதி நிர்வாகம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.
பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் தங்கியிருக்கிறது.
உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனூடாக வருமானத்தை உயர்த்த வேண்டிய தேவையும் உள்ளது.
கல்விக்கும் சுகாதாரத்துக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளை இல்லாமல்செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
2025 ஆம் ஆண்டு பொருட்கள் சேவை ஏற்றுமதியில் உயர்வை எதிர்பார்க்கிறோம்.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுமுதல் நாம் வெளிநாட்டுக் கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக இப்போதுமுதல் தயார்படுத்தல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்துக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் அடையாள அட்டையை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டம்.
சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்ப வருமானத்தை ஐந்து பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை.
அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பராமரிப்பதற்கு பாரிய செலவு ஏற்பட்டுள்ளது. அவ்வாறான செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விலையுயர்ந்த அரசு சொகுசு வாகனங்களும் அடுத்த மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வணிக மயமாக்குவதற்கு 1 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
திரிபோஷா திட்டத்திற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்..
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குவதற்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக சுகாதாரத் துறைக்கு 604 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பெண்கள் வலுவூட்டல் திட்டங்களுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மருந்து, மருத்துவ உபகரண கொள்வனவுக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மஹபொல புலமைப் பரிசில் தொகை 5000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக அதிகரிப்பு.
பாடசாலை கட்டமைப்பை மீளாய்வு செய்யும் திட்டத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஐந்து மாகாணங்களில் பாடசாலை விளையாட்டு மேம்பாட்டுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
யாழ்ப்பாண பொது நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதோடு நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. பாலர் பாடசாலை சிறார்களுக்கான காலை உணவின் விலை 100 ரூபாவாக உயர்த்தப்படும்.
திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகள் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படும்.
நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டள்ள நிதிக்கு மேலதிகமாக மேலும் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கில் தெங்கு முக்கோணப் பகுதிக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் குறைந்த வருமானம் பெறும் மூத்த குடிமக்களுக்கான உதவித்தொகை மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்.
அஸ்வெசும நிவாரணத் திட்டத்துக்கு 232.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
நன்னீர் மீன்பிடித்துறை வளர்ச்சிக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தடுப்பு மையங்கள், அநாதை இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு.
இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு நிலையான, பாதுகாப்பான வீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பண்டிகைக் காலத்திற்காக சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் திட்டத்திற்கு ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும்.
அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரையிலான களனிவெளி ரயில் பாதையின் முன்மொழியப்பட்ட விரிவாக்கத்தின் ஆரம்ப பணிகளுக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
வடக்கில் பாலங்கள் மற்றும் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
யானை- மனித மோதலை குறைப்பதற்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். மேலும் இழப்பீடு வழங்குவதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
மீள்குடியேற்றத்திற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.
கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு 108 அலகுகள் கொண்ட வீடமைப்புத் திட்டம்.
இலங்கை தினத்தை கொண்டாடுவதற்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும்.
அரச துறையில் 30ஆயிரம் வெற்றிடங்கள் நிரப்பப்படும். அதற்கென 10ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அரச துறையில் 30ஆயிரம் வெற்றிடங்கள் நிரப்பப்படும். அதற்கென 10ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 2025 ஏப்ரலில் 21 ஆயிரத்திலிருந்து 27ஆயிரம் ரூபாவாகவும் 2026 ஆம் ஆண்டு 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் யோசனை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.
வரி வசூலிப்பது தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சட்ட கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் கேட்கும் எவரையும் நாம் மன்னிக்க மாட்டோம். இலஞ்சம் வாங்கும் ஒவ்வொருவரும் பயப்படும் சமுதாயத்தை நாம் உருவாக்குவோம்.