அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும்
நடவடிக்கைகள் முன்னெடுப்பு

0
221

இலங்கை இரட்சணிய சேனை நாட்டில் முன்னெடுத்தது வரும் சமூக அபிவிருத்தி பணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பு இரட்சணிய சேனை ஆலய மேஜர் எம் .புவனேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக பனியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வருகின்றன .

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிதுங்கிய கிராமங்களான திருப்பெருந்துறை மற்றும் மயிலம்பாவெளி கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்களின் அடிப்படை தேவையாக காணப்பட்ட மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட வருகின்றன

இலங்கை இரட்சணிய சேனையினால் 40 இலட்சம் ரூபா நிதியில் 17 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டு இரட்சணிய சேனையின் லெப்டினெல் கேணல் ரஞ்சித் சேனாரத்ன அவர்களினால் பயனாளிகளுக்கு இன்று கையளிக்கப்பட்டன .
இதேவேளை சிறுவர் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இரட்சணிய சேனையின் லெப்டினெல் கேணல் விஜயா சேனாரத்னவினால் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது