அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான அறிவித்தல்!

0
302

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நிமித்தம் வேறொரு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமாயின் தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

இதேவேளை, எந்த ஒரு அரசாங்க ஊழியரும் பணி நிமித்தம் வேறொரு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமானால் நிறுவனத் தலைவரிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை இன்று (11) நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.