அப்துல்கலாம் -காலத்தை வென்ற கனவுகளின் நாயகன் – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு.

0
139

கலாம் -காலத்தை வென்ற கனவுகளின் நாயகன் – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு.

மிகச்சிறந்த விஞ்ஞானி, அறிவியல் மேதை, இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் என பல்துறைகளிலும் பரிணமித்து, ஆரோக்கியமான இளைஞர் சமூகமொன்றை வாழ்வின் இலக்கு நோக்கிய கனவுகளோடு முன்னகர்த்திச் சென்ற பெருமைக்குரியவரான் A.P.J அப்துல்கலாம் அவர்கள் காலத்தை வென்ற கனவுகளின் நாயகனாகவே இன்றளவும் பூசிக்கப்படுகிறார் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நக்கீரர் தமிழ்ச்சங்கமும், மீடியா நியூஸ் தமிழ் வார இதழும் இணைந்து, 2022.10.16 ஆம் திகதி, சென்னை, தி.நகரில் நடத்திய, “மேனாள் இந்திய குடியரசுத் தலைவர், டாக்டர்A.P.J அப்துல்கலாம் பிறந்தநாள் தமிழ்விழா”வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலக்கியத் திறனாய்வாளர் திரு.கொடைக்கானல் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், நக்கீரர் தமிழ்ச்சங்கத்தினரால் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.