அமரர் சரவணை கந்தையா ஞாபகார்த்த
மென்பந்து கிரிக்கெட்டு சுற்றுப் போட்டி

0
331

திருக்கோவில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய அமரர் சரவணை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட்டு சுற்றுப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு இருந்ததுடன் இறுதிச் சுற்றுக்கு அக்கரைப்பற்று ஹிச்சிறா அணியும் திருக்கோவில் குட்நிக் அணியும் பங்கு கொண்டு இருந்தன
இவ் இறுதிச் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று ஹிச்சிறா அணி திருக்கோவில் குட்நிக் அணியை 19 ஓட்டங்களால் வெற்றி கொண்டு வெற்றிக் கிண்ணத்தினையும் 40ஆயிரம் ரூபா பணத்தையும் வெற்றிகொண்டதுடன் திருக்கோவில் குட்நிக் அணிக்கு 20ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் இம்முறை விநாயகபுரம் மகாவித்தியாலயத்தில் இருந்து மருத்துவத் துறைக்கு தெரிவாகி இருந்த முருகாணந்தம் தனுஷ்கா விளையாட்டு கழக நிருவாகிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டு இருந்ததுடன் நிகழ்வில் மதகுருமார்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் திருக்கோவில் பிரதேசசபை உதவி தவிசாளர் எஸ்.விக்னேஸ்வரன் வங்கி முகாமையாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இலங்கை நாடு பொருளாதாரத்தில் உயர்வடைய பெண்களை கொண்டு இரவு களியாட்ட விழாக்கலா? நாடும் ஆட்சியாளர்களின் சிந்ததையும் அழிவைநோக்கி செல்கிறது என முன்னாள் எம்பி. கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இரவு நேர கேளிக்கைகளின் ஊடாக பெண்களை வைத்து வருமானத்தை ஏற்படுத்த முடியும் என ஒரு பெண் அமைச்சர் கூறும் அளவுக்கு இவர்களின் வங்குரோத்து அரசியல் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்ட கழகம் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நாட்டில் திட்டமிட்டப் ஒரு நிகழ்சி நிரலின் ஊடாக தழிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதனுடாக தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது இந்த நாட்டு அரசு தனது கொள்கைகளை மறந்து நாட்டை சீரழிந்து செல்வதற்கு காரண கருத்தாவாக அமைந்து இருக்கின்றன.

இந்த நாட்டி பெண் அமைச்சர் ஒருவர் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இரவு நேரக் களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதன் ஊடாக இந்த நாடும் நாடடின் ஆட்சியாளர்களின் சிந்தனைகள் அழிவை நோக்கி சென்று கொண்டு இருப்பதை எடுத்து காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்று மேலுதி தெரிவித்து இருந்தார்.