அமெரிக்க இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

0
242

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்றே இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

டோஹாவிலிருந்து இலங்கை வந்த கட்டார் எயார்லைன்ஸ் விமானத்தில் 16 இராணுவ அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.
அவர்கள் ஒரு நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.