அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது இஸ்ரேல் – ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடுவர்கள் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது.
சீனா தமது வான்பரப்பில் உளவு பலூன்களை அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
தெற்கு கரோலினா கடற்கரையில் அமெரிக்க போர் விமானம் ஒன்றை சீனா சுட்டு வீழ்த்தியது.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்த ந்திப்ப இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.