அம்பாறை அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழ்பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவரும்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட
அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான, டபிள்யு.டி.வீரசிங்க விஜயம் மேற்கொண்டார்.
சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் கயிலாயபிள்ளையின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட அவரை,இல்லத்தலைவர் உள்ளிட்டவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான கிந்துஜாவின்வேண்டுகோளுக்கிணங்க சிறுவர் இல்லத்தின் குறைபாடுகள் தொடர்பில் கேட்;டறிந்ததுடன், இல்லத்தின்தேவைப்பாடுகளை முடிந்தளவு உரிய அமைச்சுக்களிடம் கூறி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இதேவேளை, அன்னை சாரதா வித்தியாலயத்திற்கும் சென்ற டபிள்யு.டி.வீரசிங்க, தனது சொந்த நிதியில் சிறுநிதியினை வித்தியாலய அதிபரிடம் கையளித்ததுடன், பாடசாலை தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தமை
குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை அக்கரைப்பற்றிற்கு மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர் விஜயம்!