அம்பாறை-கல்முனையில் பயணக்கட்டுப்பாட்டை மீறும் மக்கள்

0
317

பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் அதிகளவான மக்கள் வீதிகளில் பயணித்ததை காணமுடிந்தது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள உடையார் வீதி, மாதவன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி மக்கள் தத்தமது வாகனங்களில் வழமை போன்று நடமாடி வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த விடயங்களில் ஈடுபடாது வீடுகளில் முடங்கி இருக்குமாறு அடிக்கடி ஒலிபெருக்கி வாயிலாக சுகாதார தரப்பினர் வேண்டுகோள் விடுத்த போதிலும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை இவ்வாறு பயணத்தடைகளை மிறிச் செயற்படுவதை காண முடிகின்றது.

கடந்த 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் நாளை காலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் இவ்வாறு பயணத்தடையை மீறும் செயற்பாடு தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.