அம்பாறை கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை பொலிஸாரால் ஏற்பாடு

0
131

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை நேற்று மாலை கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில்
நடைபெற்றது.

அதிதிகள் பாராம்பரிய பொல் அடியுடன் வரவேற்கப்பட்டனர். கிராஅத் ஓதலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு வரவேற்பு உரையினை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆற்றினார்.

கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸ் பொலிஸ் தினத்தின் முக்கியத்தும் குறித்து உரையாற்றினார்.