அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில், கடவுச்சீட்டிற்கான கைவிரல் அடையாளப்பதிவு ஆரம்பம்

0
219

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கமைய கை விரல் அடையாளத்தைப் பதிவு செய்யும் பணி இன்று காலை 8.30 மணியளவில் அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிரதேச செயலகங்களில் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்கான விரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கைவிரல் அடையாளத்தைப் பதிவு
செய்ய முடியும்.
பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்
திணைக்களம் தெரிவித்துள்ளது.