அம்பாறை சாய்ந்தமருதில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

0
182

அம்பாறை சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைக்கிணங்க, கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையும் இடம்பெற்றது.
அல்- ஹிலால் வித்தியாலய அதிபர் நஸார் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை முன்றலில் ஆரம்பித்த விழிப்புணர்வு பேரணியானது, சாய்ந்தமருது பொதுச்சந்தை வரை சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை அடைந்தது.
மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டதுடன், போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.