அம்பாறை திருக்கோவிலில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

0
129

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி,
திருக்கோவிலில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் பேரணி
இடம்பெற்றது.
பேரணியானது தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சென்று, திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச் சந்தியில்
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பேரணியில் தாய்மார்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.